ஸ்பிரிட் படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை தீபிகா படுகோன் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். அவர் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.

Deepika Padukone Opens Up about Spirit Movie Controversy : ஸ்பிரிட் படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன் சமீபத்தில் மௌனம் கலைத்துள்ளார். பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்திலிருந்து விலகியதால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, தீபிகாவின் செயலை விமர்சித்திருந்தார். த்ரிப்தி டிம்ரி தீபிகாவுக்கு பதிலாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது, எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடாமல், தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும், மனசாட்சிக்கு ஏற்றவாறு செயல்படுவதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.

ஸ்பிரிட் சர்ச்சை குறித்து தீபிகா என்ன சொன்னார்?

சர்ச்சைக்கு மத்தியில் தீபிகா படுகோன் செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது எனக்கு மன அமைதியை அளிக்கிறது" என்று கூறினார். எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடாமல், "குழப்பமான சூழ்நிலைகளில் என் மனசாட்சியின் குரலைக் கேட்டு முடிவெடுப்பேன். என் முடிவில் உறுதியாக இருப்பேன். அது எனக்கு மன அமைதியைத் தரும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "என் மனசாட்சி சொல்வதைக் கேட்பேன். அது சரியாகத் தோன்றும். சொல்வது எளிது, செய்வது கடினம். ஆனால், சுற்றியுள்ள சத்தங்களை அணைத்துவிட்டால், மனசாட்சியின் குரல் கேட்கும். பதில்கள் எப்போதும் நம்மிடம்தான் உள்ளன. எனக்குப் பிடித்தவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும், நேர்மையாக இருப்பதும் எனக்கு மன அமைதியைத் தரும். என் முடிவில் உறுதியாக இருப்பது எனக்கு மனநிறைவைத் தரும்" என்றார்.

ஏன் ஸ்பிரிட் படத்திலிருந்து விலகினார் தீபிகா?

அர்ஜுன் ரெட்டி, அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். 100 நாட்கள் படப்பிடிப்புக்கு ஒப்பந்தமான தீபிகா, 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற மாட்டேன் என்றும், கூடுதல் நேரத்துக்கு கூடுதல் சம்பளம் வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், த்ரிப்தி டிம்ரியை சந்தீப் ரெட்டி வங்கா ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.