'மிருதன்', 'டிக் டிக் டிக்', போன்று கற்பனைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'டெடி'.

'டெடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கரடி பொம்மை முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை பார்த்தல்... மருத்துவராக இருக்கும் ஆர்யா ஒரு பொம்மை மூலம் பல உண்மைகள் தெரிய வர, அதனை தடுக்க ஆக்ஷன் ஹீரோவாக எப்படி மாறுகிறார், இதன் பின்னணி என்ன? என்பதை மிகவும் வித்தியாசமான கதை களத்தில் கூறியுள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தராஜன்.

'டெடி' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, அவரது காதல் மனைவி சயீஷா நடித்துள்ளார். கஜினிக்காத படத்திற்கு பின், நடிகர் ஆர்யா சஈஷாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  கடந்த வருடமே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அணைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது ஆர்யாவின் 'டெடி'.

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ள 'டெடி' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம், மார்ச் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.