ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர்  இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து நிழல்கள் , காதல் ஓவியம், புதுமைப் பெண், முதல் மரியாதை,  கிழக்குச் சீமையிலே  என பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றார்.

 
 
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலமே இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் மரணமடைந்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பாரதி ராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். அவரது மறைவால் திரையுலகிலனர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.