Dear BJP Stop the Hindu nationwide campaign We are better than that - Siddharth

மோடி அரசு அண்மையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 'மாட்டிறைச்சித் திருவிழாக்கள்” களைக் கட்டுகின்றன.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் கருத்து ஒன்றைத் தெரிவித்து, அதில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் நடிகர் சித்தார்த் டிவிட்டியது

”அன்பார்ந்த பாஜக! உங்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதை நாட்டை முன்னேற்ற பயன்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்த இந்து தேச பிரச்சாரத்தை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள்.

மாட்டிறைச்சி தொடர்பான தடை உத்தரவு தேவையற்றது. அது மக்களை கிளர்ச்சியடைய வைக்கிறது. மாநில அரசுகள் ஏற்றாலும், மத்திய அரசு இதனைத் தவிர்க்க வேண்டும்.

நாம் இந்தியர்கள். வாழுங்கள், வாழவிடுங்கள். வெறுப்பை நிறுத்துங்கள்” என்று அசாத்திய தைரியத்துடன் மத்திய அரசிற்கு எது நல்லதோ அதை சொல்லியிருக்கிறார்,