dd putting gents vesti shirt
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அக்கினி வெய்யில் பலரை பயமுறுத்தி வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெய்யில் மண்டையை பிளப்பதால் ஏசி இல்லாமல் இருக்கவே முடியவில்லை என பலர் புலம்பி வருகின்றனர்.
மேலும் குழந்தைகள், இந்த வெய்யிலினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கோடை காலங்களில் பரவும் நோய்களும் அதிகம் பரவி வருகிறது. மருத்துவர்களும் மக்கள் அதிக அளவு தண்ணீர் மற்றும் நீர் சத்துள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெய்யிலின் வெட்பம் தாங்க முடியாமல், பிரபல தொகுப்பளினியும், நடிகையுமான டிடி ஆண்கள் பரவலாக அணியும் வேஷ்டி சட்டைக்கு மாறியுள்ளார்.
இவர் இந்த உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பல ஆண் ரசிகர்கள் இவர் இந்த உடையில் இருப்பதை பார்த்து, ஆண்கள் போடும் இந்த உடைய கூட விட்டு வைக்க மாட்டீர்களா என விமர்சித்து வருகின்றனர்.
