dd pub dance

பிரபல தொகுப்பாளினி டிடி அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சுசி லீக்சில் ஆரம்பித்த பிரச்சனை தான் தற்போது இவரை விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிடி யை பொதுவாகவே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது சிரித்தபடியே மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார். அது, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களை , தங்களை மறந்து நிகழ்ச்சியில் லயிக்க வைத்துவிடும். இப்படிப் பட்டவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தற்போது வரை ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டிடி., நடன இயக்குனர் சதீஷ் மற்றும் தன்னுடைய நண்பர்களுடன் இரவு நேர பப் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது நண்பர்களே எதிர்பாராத விதமாக மிகவும் வித்தியாசமாக அமர்ந்த இடத்தில் இருந்தே சதீஷுடன் ஒரு நடனமாடியுள்ளார். 

இந்த நடனத்தைப் பார்த்து பலர் டிடி., அழகாகப் பேசுவதைப் போல் நடனத்திலும் கலக்கியுள்ளார் என பாசிடிவ்வான கமெண்ட்களைக் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும், சிலர் நெகடிவ் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.