தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி தற்போது, சின்னத்திரையை தாண்டி பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடித்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாடலிங் செய்யவும் துவங்கியுள்ளார். 

இவர் முன்பு நிகழ்ச்சிகளை கலகலப்பான பேச்சால் மட்டுமே தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது இவர் தொகுத்து வழங்கி வரும் 'என் கிட்ட மோததே' நிகழ்ச்சி டிடியின் ஆட்டம், பாட்டத்தால் களைகட்டி வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

அதேபோல் முன்பைவிட, டிடி அழகில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும். எப்போதும் புல் ,மேக்கப்பில் உள்ளார் என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. 

பிளாஸ்டிக் சர்ஜரி:

இந்நிலையில் தற்போது டிடி அழகை மேலும் அதிகரிப்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் கிட்டதட்ட இவர் நடிகை சமந்தா போல் தெரிவதாகவும் சிலர் கூறுகிறார்கள். 

இப்படி பரவி வரும், பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சைக்கு டிடியும் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.