dd got meha movie chance
பெண் தொகுப்பாளர்களில் அனைவராலும் ரசிக்கப் படுபவர் டிடி. திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்ற வாசலை நாடிய இவர், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பிலும் திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கெனவே இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'ப.பாண்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது மிகவும் பிரமாண்டமாக இசையை மையபடுத்தி எடுக்கப்பட உள்ள 'சர்வம் தால மாயம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை மின்சாரக் கனவு படத்தை இயக்கிய இயக்குனர் ராஜீவ் மேனன் பல ஆண்டுகள் கழித்து இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார், கதாநாயகியாக 8 தோட்டாக்கள் மூலம் தமிழில் அறிமுகம் ஆன மலையாள நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முதல் முறையாக தன்னுடைய மாமாவும் குருவுமான ஏ.ஆர். ரகுமான் இசையில் ஜிவி .பிரகாஷ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
