dd explain one word in velaikkaran movie

பிரபல தொகுப்பாளினி 'டிடி' நடிகர் சிவகார்த்திகேயனுடன் சின்னத்திரையில் ஒன்றாக பணியாற்றிய காலம் முதலே நல்ல தோழி. இதனால் சிவகார்த்திகேயன் நடித்த எந்தத் திரைப்படம் வெளி வந்தாலும் அதை முதல் நாளே பார்த்து விட்டு அந்தப் படத்தின் கருத்தை வெளியிடுவார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் இன்று வெளியானது. மிகவும் வித்தியாசமாக இந்தப் படத்திற்கு பிரமோஷன் செய்யப்பட்டதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் நல்ல விமர்சனத்தைப் பெற்று வரும் 'வேலைக்காரன்' படம் குறித்து தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரே வார்த்தையில் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பது...

வேலைக்காரன் பிளாக் பஸ்ட்டர்... இயக்குனர் மோகன் ராஜாவுக்கு பெரிய சல்யூட்... சிறந்த டீம் வொர்க் மற்றும் அனிருத் ,ஃபாகத், ரோகிணி மேடம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

Scroll to load tweet…