புஷ்பா படத்தில் இடம்பெறும் ஸ்ரீவள்ளி என்கிற பாடலில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆடும் நடனம் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா. பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்த இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக தெலுங்கில் எந்த அளவு ஹிட் ஆனதோ, அதே அளவு தமிழிலும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொடி எங்கும் பிரபலமானது. அது மட்டுமின்றி, இப்படத்தில் இடம்பெறும் ஸ்ரீவள்ளி என்கிற பாடலில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆடும் நடனம் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

View post on Instagram

அவரைப்போல் நடனமாடி ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களை இந்த டிரெண்டை பின்பற்றி வருகின்றனர்.

View post on Instagram

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நேற்று இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டது வைரலான நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது நண்பர்களுடன் இணைந்து அப்பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். மேலும் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View post on Instagram
View post on Instagram