இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அவ்வப்போது இந்த படத்தின் அதிரடி அப்டேட்ஸ் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், சற்றும் முன், இன்று சரியாக 6 மணி அளவில், 'தர்பார்' படத்தில் இடம் பெற்றுள்ள 'டும் டும்' பாடலின் செகண்ட் சிங்கள் வெளியாக உள்ளதாக போஸ் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். 

இந்த போஸ்டரில் நயன்தாரா - மற்றும் சூப்பர் ஸ்டார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த டும் டும் பாடல், காதல் பாடலாகவோ, அல்லது திருமண பாடலாகவோ இருக்கும் என யூகிக்க முடிகிறது.

ஏற்கனவே 'தர்பார்' படத்தில் இருந்து, அனிரூத் இசையில் வெளியான சும்மா கிழி பாடல், சில சர்ச்சைகளை சந்தித்த போதிலும் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

துள்ளும் இளமையோடு, அதிரடி காவல் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'டும் டும்' பாடலின் செகண்ட் சிங்கள் வெளியாக உள்ள தகவலை படக்குழுவினர் அறிவித்ததுமே... ரசிகர்கள் இதனை ஜோராக, வைரலாக வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.