*தமிழ் சினிமாவின் ஹாட் டிரெண்ட் இப்போ ‘மாஸ்டர்’தான்.  அப்படத்தினை பற்றி எந்த தகவல் வந்தாலும் வைரலாகிறது.  அப்படத்தின் லுக்-கள் காப்பியடிக்கப்பட்டவை! என்று ஒரு தீ கிளம்பியது.  அடுத்து அப்படத்தின் கிளைமேக்ஸ் ஃபைட் வீடியோ  லீக்! என்று ஒரு வீடியோ வைரலானது.  இந்த நிலையில் விஜய்யின் மேனேஜர் ஏகபோக பணக்காரராக ஆவதுதான் இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.  தளபதியின் புதிய படத்தின் தயாரிப்பாளரும் அவரே. 

*பொன்னியின் செல்வன் படத்தின் முதல் ஷெட்யூல் தாய்லாந்தில் செமத்தியாக முடிந்துவிட்ட நிலையில் அடுத்த ஷெட்யூலுக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இதில் தனது பழைய சிஷ்யர்களான சுகிகணேசன், அழகம் பெருமாள் இருவரையும் இணைத்துள்ளார் மீண்டும் உதவி இயக்குநர்களாக. அவர்களும் நன்றிக்கடனுக்காக குருவுக்கு உதவிட வந்துள்ளனர். 

*தர்பார் படம் தரமான படம்! என்றும் பெயர் பெறவில்லை, கமர்ஷியல் ஹிட்! என்றும் பெயரெடுக்கவில்லை. பொத்தாம் பொதுவான படமாகவே டீல் செய்யப்பட்டு வருகிறது. லைக்காவுக்கு செம்ம காயமாம் இப்படத்தினால். ஆனால் இந்த நஷ்டத்தை ரஜினியிடம் சொல்லி அவரை அதிருப்தியடைய செய்துவிடவே கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் லைக்காவின் சுபாஷ்கரன். 

*சந்தானத்தை ‘காமெடி கிங்’ ஆக்கிய இயக்குநர்களில் மிக முக்கியமானவர் ராஜேஷ் எம். ஆனால் அவருக்கு இப்போ நேரம் சுத்தமாக சரியில்லை. எடுத்த படங்கள் அட்டர் ஃபிளாப். நொந்து கிடந்தவருக்கு சந்தானமே போன் போட்டு, தனக்கான ஒரு கதையை ரெடி பண்ண சொல்லியிருக்கிறார் ‘சிவா மனசுல சக்தி! ஒரு கல் ஒரு கண்ணாடியை விட டாப்பா காமெடி இருக்கணும்’ என்று ஆர்டர் போட்டுள்ளாராம். 

*அடங்க மறு! படத்தின் மூலம் அம்சமாய் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் தங்கவேல். விஜய்க்காக செம்ம கதை ஒன்றை ரெடி பண்ணி வைத்திருந்தார். இக்கதையை சத்யஜோதி ஃபிலிம்ஸிடம் சொல்ல, அவர்கள் கதையில் ஏக  குஷியாகி போய் தனுஷை பார்க்க சொல்லியுள்ளனர். ஏனென்றால் தனுஷின் கால்சீட் இவர்களிடம் உள்ளது. தனுஷும் இக்கதையை கேட்டு சிலிர்த்துவிட்டாராம்.  விரைவில் ஷூட்டிங்.