ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தர்பார்" திரைப்படம் கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸான அன்று முதல் நாள் முதல் காட்சி காய்ச்சலில் அலைந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், தியேட்டர்களில் கூட்டம் சேர்த்து கெத்து காட்டியதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கூட்டமே இல்லாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. 

படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் எங் லுக்கை தவிர மற்ற எதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். திரைக்கதை சரியாக இல்லை என அப்செட் ஆன ரசிகர்கள் பலரும் முருகதாஸ் என் தலைவர என்ன செஞ்சி வச்சியிருக்க என ஆவேசகமாக பதிவிட்டனர். 

தற்போது படம் ரிலீஸாகி  7 நாட்கள் ஆகும் நிலையில் சோசியல் மீடியாவில் தர்பார் படம் குறித்த மீம்ஸ்கள் தூள் பறக்கிறது. அதில் முதலில் சிக்கியுள்ளது நம்ம அனிருத். சும்மா கிழி பாடல் லிரிக் வீடியோ வெளியான அன்றே, ஐயப்பன் பாடல் காப்பி என சோசியல் மீடியாவில் அனிருத்தை மரண பங்கம் செய்தனர் நெட்டிசன்கள். 

இப்போது தர்பார் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் நீ மியூசிக்கை மட்டும் போடு. தலைவா... தலைவான்னு கூவுறது அவங்க பார்த்துப்பாங்க என கலாய்த்துள்ளனர். 

மேலும் 70 வயதிலும் எங் லுக்கில் செம்ம ஸ்டைலாக ரஜினி மாஸ் காட்டியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிலரோ சண்டை காட்சிகளில் நடித்துள்ளது ரஜினியே அல்ல, அவருடைய டூப் என அளந்துவிட்டனர். இதனிடையே சூப்பர் ஸ்டாரின் சண்டை காட்சிகளை கலாய்க்கும் விதமாக அவருடைய மருமகன் தனுஷை வைத்தே கிரியேட் செய்யப்பட்டுள்ள மீம்ஸ்கள் லைக்குகளை குவிக்கிறது. 

தர்பார் படத்தின் முதல் ஆப் சூப்பராக இருப்பதாகவும், செகன்ட் ஆப் ஜவ்வாக இழுப்பதாகவும் கூறப்பட்டது. அதை கமெண்ட் செய்யும் வகையில் இடைவேளையில் தியேட்டரை விட்டு ஓடுவது போன்ற மீம்ஸ்கள் தீயாய் பரவிவருகிறது. 

அதேபோல சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் வயதானவர்கள் என கலாய்க்கும் வழக்கமான, டீயில் சர்க்கரை போடாதீங்க மீம்ஸும் செம்ம வைரலாகி வருகிறது.