அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும், 63 ஆவது படத்தில், முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து வருபவர் வில்லன் நடிகர் டானியல் பாலாஜி. 

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும், 63 ஆவது படத்தில், முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து வருபவர் வில்லன் நடிகர் டானியல் பாலாஜி.

ஹீரோ, ஹீரோயின்கள் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், நடிகர் டானியல் பாலாஜி கதை பிடித்தால் மட்டுமே வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வார். 

இந்நிலையில், தளபதி 63 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என பேட்டி ஒன்றில் முதல் முறையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகியில்... "ஒரு நாள் இயக்குனர் அட்லீ திடீர் என போன் செய்து அவருடைய ஆபிசில் வந்து சந்திக்க முடியுமா என கேட்டுள்ளர்.

உடனே டானியல் பாலாஜியும் அட்லீயை அவருடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது விஜயை வைத்து அடுத்ததாக தான் இயக்க உள்ள படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியுமா என அட்லீ கேட்டதும், என்ன கதை... கதாப்பாத்திரம் என எதுவுமே தெரியாத போதும் உடனடியாக ஒப்புக்கொண்டாராம். 

இதற்க்கு முக்கிய காரணம். விஜய் படம் என்பது மட்டும் அல்ல, இயக்குனர் அட்லீ மூன்று வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பதால் என டானியல் பாலாஜி கூறியுள்ளார்.