dangal made a world record and beat the bahubali
பாகுபலி-2 படத்தின் அனைத்து வசூலை மிக எளிதில் முந்தியது பாலிவுட் படமான டங்கல். இது உலக அளவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை தட்டிச் சென்றது.
பாலிவுட்டில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் டங்கல். மஹாவீர் சிங் போகத் என்ற மல்யுத்த வீரரின் நிஜ வாழ்க்கையை சித்தரித்துள்ள இந்த படம் உலக அளவில் 2000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதித்துள்ளது.
இந்த சாதனை மூலம் ரூ.2000 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை டங்கல் பெற்றுள்ளது.
மேலும், உலக அளவில் ரூ.2000 கோடி வசூலை எட்டிய ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களின் பட்டியலிலும் டங்கல் ஐந்தாவதாக இணைந்துள்ளது.
சீனாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் அந்நாட்டில் அதிக வசூல் வேட்டை நடத்திய படமாகவும் சாதனை படைத்து மாஸ் காட்டியுள்ளது.
இவ்வளவு சாதனையை குவித்த டங்கல் படம், பாகுபலியை அடித்து நொறுக்கியுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்துவத்தை போற்றும் பாகுபலியை தூக்கி நிறுத்த இந்தியாவின் பல சக்திகள் வேலை செய்த போதும், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கதை, நடிப்பு, திரைக்கதையை மட்டுமே வைத்து டங்கல் இந்த வெற்றியை சாதித்துள்ளது. இதன்மூலம் கிராபிக்ஸ்க்கு அல்ல, உண்மையான கதையே ரசிகனின் எதிர்ப்பாப்பு என்பதை உலகளவில் பறைசாற்றியுள்ளது டங்கல்.
