Asianet News TamilAsianet News Tamil

'ரன்னர்' படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜானி! வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ரன்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
 

Dance master jani acting runner movie first look released
Author
First Published Jul 4, 2023, 7:53 PM IST

நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் திறமை தலைமுறை தாண்டிய சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது நடனம் பல நட்சத்திர கதாநாயகர்களையும் கவர்ந்துள்ளது.

இவர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு முன் 'அரவிந்த் 2' படத்தை தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஜய் சௌத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆக்‌ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு நடந்த திருமணம்..! ஒன்று கூடிய பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்!

காவல் துறையின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த அழுத்தமான படத்தின் மையப்பகுதியை தந்தை-மகன் உறவு ஆக்கிரமித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஹீரோ காக்கி பேன்ட் மற்றும் ஷர்ட் அணிந்து அதிரடியாக பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். ஒருபுறம் காக்கி சீருடையும் மறுபுறம் கதரும் 'ரன்னர்' கதையின் கருவுடன் தொடர்புடைய ஒன்றைக் குறிக்கிறது.

செம்ம ஸ்ட்ரெக்ச்சர்... சேலையில் கூட ஸ்டைலிஷ் பேபியாக மாறி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஜானி மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் விஜய் சவுத்ரி, அவரை 'டான்சிங் ஸ்டார்' என்று வர்ணித்துள்ளார். படம் குறித்தும் அவர் மேலும் கூறியிருப்பதாவது, "திறமையான நடன இயக்குநரான ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நடிப்புத் திறமை, அவரது குணாதிசயங்கள் மற்றும் அப்பா-மகன் இருவருக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும். இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் திரைப்படம். மணி சர்மா அற்புதமான இசையையும் பாடல்களையும் கொடுத்துள்ளார். ஜானி மாஸ்டரின் நடன அசைவுகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். படம் குறித்தான மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று கூறினார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் விஜய பாஸ்கர், ஜி.பனியேந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் படத்தின் கதை மிகவும் நன்றாக வந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், "ஸ்கிரிப்ட் வேலைகள் மற்றும் முன் தயாரிப்பு வேலைகள் மிகவும் கவனமாக நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இந்தப் படம் இருக்கும். ஜூலை 20 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios