குடி என்றால் என்னவென்றே தெரியாது. சரக்கு பாட்டில்கள் சதுரமாக இருக்குமா அல்லது செவ்வகமாக இருக்குமா என்பது கூட தெரியாத அப்பாவி போல் தன் மீது போலீஸார் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் உடான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்.

ஏற்கனவே பலமுறை குடிபோதையில் வாகனம் ஓட்டிய பஞ்சாயத்துகளுக்காக போலீஸாரிடம் சிக்கி சின்னாபின்னமான காயத்ரி ரகுராம் நேற்றும் பெரும்போதையில் வண்டி ஓட்டி போலீசில் மாட்டி ரூ.3500 அபராதம் கட்டி வீடு திரும்பினார். அவர் அபராதம் கட்டி அவமானப்பட்ட செய்தி காவல்துறையின் செய்திக்குறிப்பாக இன்று அனைத்து தினசரிகளிலும் கூட வெளிவந்தது.

இந்நிலையில் முற்றிலும் தெளிந்த நிலையில், நேற்று நடந்ததாக வெளிவந்த செய்திகள் அப்பட்டமான புழுகு என்றும் ஒரு பத்திரிகை நிருபர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு அப்பழியை தன்மீது போட்டிருப்பதாகவும் தொடர்ந்து ட்வீட் பண்ணிவருகிறார் காயத்ரி.

'எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவைவிட வாழ்க்கையைவிட எதுவும் வலுவானது இல்லை.என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய செய்தியாளர்தான் போதையில் இருந்தார்’ என்கிறார் காயத்ரி.