Actor Shah Ruk Khan : அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற பிறகு நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் பேசிக்கொண்ட விஷயங்கள் இப்பொது வைரலாகி வருகின்றது.

பாலிவுட் உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்துவரும் முன்னணி நடிகர் தான் ஷாருக்கான். சினிமா பின்புலம் இல்லாமல் மும்பைக்கு வந்து சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கி. இன்று இந்திய சினிமாவின் முகமாக, உலக அரங்கில் திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஷாருக்கான் என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல. 

அதிக அளவில் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்ததில்லை என்றாலும் கூட இவருக்கு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1998வது வருடம் வெளியான "உயிரே" என்கின்ற திரைப்படம் தான் என்று கூறினால் அது மிகையல்ல. 

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக காதலனை கரம்பிடித்தாரா அமலாபால்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

ஹிந்தியில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "தில் சே" என்கின்ற திரைப்படம் தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "உயிரே" என்ற பெயரில் வெளியானது. ஷாருக்கானுடைய திரை வாழ்க்கையில் பல மிக முக்கியமான திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

அப்பொழுது மேடையில் வீற்றிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், ஷாருக் கானை பார்த்து நீங்கள் மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஏன் நீங்கள் இன்னும் அவருடன் அடுத்த படத்தின் நடிக்கவில்லை? அது குறித்து நீங்களே மணிரத்தினம் அவர்களிடம் கேட்க முடியுமா? என்று கேட்க. 

உடனே கீழே அமர்ந்திருந்த இயக்குனர் மணிரத்தினத்தை பார்த்து பேச தொடங்கிய நடிகர் ஷாருக்கான், "மணிரத்தினம் சார் ஏன் என்னை வைத்து அடுத்த படம் எடுக்க இவ்வளவு நேரம் ஆகிறது? நீங்கள் சொல்லுங்கள் ட்ரெயினின் மீது அல்ல நான் ஃபிளைட்டின் மீது ஏறி நின்று கூட "தைய தையா" பாடலுக்கு டான்ஸ் ஆட ரெடியாக இருக்கிறேன்" என்று கூறினார். 

அதற்கு மணிரத்தினம் "நிச்சயம் நான் பிளைட் வாங்கிய உடனே அடுத்த படத்தில் நாம் இருவரும் இணையலாம்" என்று அவர் ஷாருக்கானை கலாய்க்க, அதற்கு அவரோ சார் இப்பொழுது என்னுடைய மார்க்கெட் வேறு ஒரு தளத்திற்கு சென்றுவிட்டது, ஆகவே பிளைட் எல்லாம் மிக விரைவில் வாங்கிவிடலாம் என்று கூறி அவருக்கே உரித்தான ஸ்டைலில் பதில் சொல்லி இருக்கிறார்.

43 வயதிலும் கவர்ச்சியை வைத்து கல்லாகட்டும் கிரண்... முரட்டு சிங்கிள் நடிகைக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா