திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக காதலனை கரம்பிடித்தாரா அமலாபால்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
நடிகை அமலா பால் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில், அதுகுறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Amala Paul
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2017-ம் ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டே இயக்குனர் ஏ.எல்.விஜய் மருத்துவம் படித்த பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
Amala Paul Jagat desai
ஆனால் நடிகை அமலா பால் விவாகரத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வந்த அமலா பால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். அதை அறிவித்த அடுத்த வாரமே இருவரும் கொச்சியில் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்கள்.
இதையும் படியுங்கள்... ரீ-எண்ட்ரி ஆனதும் விஷ்ணு உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பூர்ணிமா... அதிர்ச்சியில் மாயா - வைரல் வீடியோ இதோ
Amala Paul Pregnant
திருமணத்துக்கு பின்னர் கணவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த அமலாபால், புத்தாண்டை ஒட்டி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இதற்காக தன் கணவருடன் கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
Bayilvan Ranganathan
நடிகை அமலா பால் நடத்தியுள்ள போட்டோஷூட்டில் வயிறு பெரிதாக இருப்பதை சுட்டிக்காட்டி யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்னர் ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த அமலாபால், ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அது நடந்து கர்ப்பம் ஆகியிருப்பாரோ என சந்தேகம் வருவதாக கூறி உள்ளார். அவரின் இந்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... 43 வயதிலும் கவர்ச்சியை வைத்து கல்லாகட்டும் கிரண்... முரட்டு சிங்கிள் நடிகைக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா