CSK dance : சென்னை அணி கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார் தோனி. 

உலக அளவில் புகழ்பெற்றது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். இந்த தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி உள்ளதால், போட்டி கடுமையாக உள்ளது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை நடந்து முடிந்த 14 சீசன்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. மறுபுறம் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக சென்னை அணி கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார் தோனி. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை அணியினர் நடனமாடும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

அந்த வீடியோவில் தோனி, பிராவோ, ருதுராஜ் உள்பட வீரர்கள் அனைவரும் வேஷ்டி சட்டையுடன் பாரம்பரிய உடை அணிந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெறும் டூடூடூ பாடலுக்கு நடனமாடும் காட்சி இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாருக்கு எழுதிய கதை! சூப்பரா இருக்கேனு தட்டிதூக்கிய விஜய்- தளபதியின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?