Asianet News TamilAsianet News Tamil

’பேட்ட’, ‘விஸ்வாசம்’ வசூல் காமெடிகளை நக்கலடித்த பிரபல இயக்குநர்...


அஜீத், ரஜினி ஆகிய இரு தரப்பினருமே தங்கள் பட வசூல் குறித்த பொய்ச்செய்திகளை தொடர்ந்து பரப்பிவருவதை ஒட்டி, பொங்கலுக்கு வெளிவந்த அவர்களது இரு பட வசூலைக் கிண்டல் செய்யும் தொனியில் பதிலளித்துள்ளார் தமிழ்ப்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

cs.amudhan tweets about petta,viswasam collection
Author
Chennai, First Published Jan 19, 2019, 4:47 PM IST

அஜீத், ரஜினி ஆகிய இரு தரப்பினருமே தங்கள் பட வசூல் குறித்த பொய்ச்செய்திகளை தொடர்ந்து பரப்பிவருவதை ஒட்டி, பொங்கலுக்கு வெளிவந்த அவர்களது இரு பட வசூலைக் கிண்டல் செய்யும் தொனியில் பதிலளித்துள்ளார் தமிழ்ப்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன்.cs.amudhan tweets about petta,viswasam collection

பொங்கலுக்கு ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய  படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இரு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய படம்தான்  அதிகம் வசூல் செய்ததாக வெளியிட்டு வருகிறார்கள். 11 நாட்களில் 'பேட்ட' தமிழகத்தில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை உலக அளவில் ரூ.100 கோடி என்று கூறப்பட்ட 'விஸ்வாசம்' படம் தமிழகத்தில் மட்டும் 8 நாளில் ரூ.125 கோடியை த்தொட்டது என்று , 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்டுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.மேலும் 'விஸ்வாசம்' திரையிடப்பட்ட திரையரங்களில் கூடுதல் நாற்காலிகள் போடப்பட்டதாக இந்த நிறுவனம் கூறியிருந்தது.தொடர்ந்து இரு நிறுவனங்களும் போட்டி போட்டு வசூலைக் கூறியதால் சமூக வலைதளங்களில் இது ஒரு கேளிக்கையான செய்தியாகவே மாறிப்போனது.cs.amudhan tweets about petta,viswasam collection

இந்த நிலையில் ’தமிழ்ப்படம்’இயக்கிய டைரக்டர் சி.எஸ். அமுதனிடம் நெட்டிசன் ஒருவர் உங்களது 'தமிழ்ப்படம் 2'  8 நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்று கேட்க, அதற்கு சி.எஸ். அமுதன், ''ஒரே இருக்கையில் இரண்டு , மூன்று நபர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டத்தைச் சமாளிக்க கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் திரையரங்களுக்குக் கொண்டு வரப்பட்டதால் அதனைக் கூறுவது கடினம்'' என்று படுநக்கலாக பதிலளித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios