பிரபல நடிகர், எழுத்தாளர், கதாசிரியராக, அனைவராலும் அறியப்பட்ட கிரேஸி மோகன் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிர் இழந்தார்.

கிரேஸி மோகன், காலமானதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், 66 வயதாகும்  கிரேஸி மோகனின் உயிர் பிற்பகல் இரண்டு மணியளவில் பிரிந்ததாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடந்து, இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.