உடன் விளையாடும் வீரர்கள் யாரும் பக்கத்தில் நெருங்கிவிடாதபடி காளை மாடு ஒன்று கால் பந்து விளையாடும் இரண்டு நிமிட வீடியோ காட்சி ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த காளை வீடியோ எடுக்கப்பட்ட ஒரிஜினல் ஊர் எது என்று தெளிவாகத் தெரியாத நிலையில், கர்நாடகா காளை என்றும் இல்லையில்லை கோவா என்றும் குழப்பி வருகிறார்கள். எது எப்படியோ நம்ம பசுநேசன் ராமராஜன் மட்டும் கொஞ்சம் இளமையாக இருந்திருந்திருந்தால் இந்த மாட்டையும் அவரையும் காம்பினேஷனாகப் போட்டு ‘எங்க ஊரு ஆட்டக்காரன்’என்றொரு படம் எடுத்திருக்கலாம்.