நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி கிளை ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. 

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படியாக இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறுதேர்தலுக்கு அவசியமில்லை என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Vijay Deverakonda Tweet : ராஷ்மிகாவுடன் காதலா?.... மனதில் உள்ளதை ஓப்பனாக போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா