Asianet News TamilAsianet News Tamil

கடன் வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்க நினைத்த விமல்! செக் வைத்த உயர்நீதிமன்றம் - அதிரடி தீர்ப்பு!

நடிகர் விமல் திரைப்பட தயாரிப்புக்காக வாங்கிய கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 

Court issued order to actor Vimal mma
Author
First Published Aug 29, 2024, 7:28 PM IST | Last Updated Aug 29, 2024, 7:28 PM IST

தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறிய நடிகர்களில் முக்கியமானவர் விமல். 2001 ஆம் ஆண்டு, வெளியான 'கலகலப்பு' திரைப்படத்தில் நடிகர் கரணின் காலேஜ்மெட்டாக நடித்த விமல், பின்னர் கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் போன்ற படங்களில் குட்டி குட்டி ரோல்களில் நடித்து கொண்டே ஹீரோவாக நடித்த வாய்ப்பு தேடினார்.

2009 ஆம் ஆண்டு, வெளியான 'பசங்க 2' திரைப்படத்தில் மீனாட்சி சுந்தரம் என்கிற லீடு ரோலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ் தான்.  இப்படம் விமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் அவார்டையும் பெற்று தந்தது.

Court issued order to actor Vimal mma

'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து களவாணி படத்தில் வில்லேஜ் பாய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் விமல். பின்னர் தூங்கா நகரம், எத்தன, வாகை சூடவா, மாட்டுத்தாவணி, கலகலப்பு, இஷ்டம், சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, என அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தன. தமிழ் சினிமாவில் மளமளவென வளர்ந்து வந்த விமல்... கதை தேர்வில் கோட்டை விட்டதால்,   இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. மஞ்சப்பை திரைப்படத்திற்கு பின்னர் ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் முதலீடு செய்ய முடிவு செய்த விமல்...  2018 ஆம் ஆண்டு கடன் உடன் வாங்கி 'மன்னர் வகையறா' என்கிற படத்தை தயாரித்து நடித்தார். பூபதி பாண்டியன் இயக்கிய இந்த படம் கிராமத்து கதை களத்தில் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் தோல்வியை தழுவியதால், விமலுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த படத்திற்காக கோபி என்பவரிடம் வாங்கிய 5 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது.

Court issued order to actor Vimal mma

அப்பா விஜயகுமாரின் 81-ஆவது பிறந்தநாள்! மகன் - மகள்களோடு சாமி தரிசனம்! வைரல் போட்டோஸ்!

கோபி இரண்டு வருடம் அவகாசம் கொடுத்த பின்னரும், தொடர்ந்து விமல் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால்,  சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. பின்னர் விமல் இந்த வழக்கு இது குறித்த வழக்கை திசை திருப்புவதற்காக கோபி மற்றும் சிங்காரவேலன் என இருவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபாய் 3 கோடியை  ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

Court issued order to actor Vimal mma

ரஜினிகாந்த் பட வசூலை பார்த்து பயந்துட்டார் எம்.ஜி.ஆர் ! எந்த படம்? முக்தா ரவி கூறிய ஆச்சர்ய தகவல்!

ஆனால் இதை கூறி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடிகர் விமல் வாங்கிய பணத்தை கொடுக்காததால் மீண்டும் கோபி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியின் தரப்பில் உள்ள ஆவணங்களை சரிபார்த்து... அவர் கூறிய புகார் உண்மை என தெரிய வந்த நிலையில்,  விமல் கோபிக்கு கொடுக்க வேண்டிய மூன்று கோடி பணத்தை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios