Asianet News TamilAsianet News Tamil

லைகா பொய் வழக்கு தொடர்ந்ததா? 5 லட்சம் அபாரம் விதித்த நீதிமன்றம்..! பிரபல நடிகரின் பரபரப்பு ட்விட்..!

தமிழ் திரை உலகின், பல பிரமாண்ட படங்களை தயாரித்து, இன்று முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்து நிறைக்கும்,  லைகா நிறுவனம் பொய் வழக்கு தொடர்த்ததற்காக ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Court imposes Rs 5 lakh fine for lyca production
Author
Chennai, First Published Aug 18, 2021, 8:11 PM IST

தமிழ் திரை உலகின், பல பிரமாண்ட படங்களை தயாரித்து, இன்று முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்து நிறைக்கும்,  லைகா நிறுவனம் பொய் வழக்கு தொடர்த்ததற்காக ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சக்ரா'. விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்த நிலையில்,  யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார்.

Court imposes Rs 5 lakh fine for lyca production

விஷால் படங்கள் என்றாலே ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கி தான் வெளியாகும் என்பது போல், இந்த படமும் பல்வேறு பிரச்சனைகளை கடந்த வெளியானது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த படம் குறித்த சர்ச்சை இன்னும் நீண்டு கொண்டு தான் உள்ளது. அந்த வங்கியில் லைகா நிறுவனம் நடிகர் விஷால் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் மீது பொய் வழக்கு தொடுத்ததற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.

Court imposes Rs 5 lakh fine for lyca production

இந்த நிலையில் நடிகர் விஷால் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவில், "நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்". லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் 'சக்ரா படத்திற்கு,எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் வித்திருள்ளது என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios