திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடபட்டுள்ளது. இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிம்புவும் சிக்கலும் :
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு. பிரபல பன்முக கலைஞரும் அரசியல்வாதியுமான டி.ராஜேந்திரன் அவர்களின் மகன். தந்தைக்கு அப்படியே ஆப்போஸிட்டாக இருக்கும் சிம்பு படப்பிடிப்புக்கு கூட தாமதமாகத்தான் வருவார் என பேர் எடுத்தவர். பெரிய இடத்து பிள்ளை என்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்கமாட்டார் என்றும் கூறுவதுண்டு. இதனால இவர் கையில் இருந்த வெற்றி கனிகள் பல கைநழுவின.
சிம்புவின் திடீர் மாற்றம் :
மாநாடு படத்தின் தாமதத்திற்கு சிம்பு தான் கரணம் என கூறி பெரிய பஞ்சாயத்தே நடைபெற்றது. பின்னர் சிம்பு முறையாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தெரிவித்தார். இதற்கிடையே தனது மாறுதலை கட்டுவதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்திருந்தார் சிம்பு. அதோடு ஈஸ்வரன் படத்தை சொன்ன நேரத்தில் முடித்து கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு ...BiggBoss Pavani reddy : சிம்பு கூப்பிட்டா உடனே போயிடுவேன்... பிக்பாஸ் பாவனி ரெட்டி சொல்கிறார்

உழைப்பிற்கு கிடைத்த வெற்றி :
சிம்புவின் இந்த மாறுதலுக்கு பரிசாக மாநாடு வெற்றி கிடைத்தது. பல ஆண்டுகளாக தோல்வி முகத்தை கண்ட சிம்புவிற்கு பெரிய ஆறுதல் கொடுத்தது மாநாடு . வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல ஓதி வைப்புகளுக்கு பிறகு வெளியான இந்த படத்தின் சி.க்கல் படம் வெளியான முதல் நாள் வரை தொடர்ந்தது. வழக்கமான சிம்புவின் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...நெல்சனுக்கு வந்த மவுசு... மீண்டும் தூசி தட்டப்படுகிறதா சிம்புவின் வேட்டை மன்னன்?- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
பிக்பாஸ் அல்டிமேட் :
மாநாடு படத்தையடுத்து வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதற்கிடையே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் விலகியதை தொடர்ந்து சிம்பு தற்போது அல்டிமேட் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். கலக்கலான ப்ரோமவ் மூலம் இந்த செய்தியை நிறுவனம் அறிவித்தது.

சிம்பு மீது புகார்:
இதற்கிடையே 2016ல் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். முன்னதாக பேசப்பட்ட சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்திருத்திருந்தார்.
மான நஷ்ட வழக்கு தொடர்ந்த சிம்பு :
மைக்கில் ராயப்பன் புகார் குறித்து சமூக ஊடகங்களில் சிம்பு மீது விமர்சங்கள் வைக்கப்பட்டன. இதனால் சிம்புவும், அவரது குடும்பமும் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளாகினர். அதோடு தயாரிப்பாளர் கட்டுப்பாடுகளையும் விதித்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...BB Ultimate : மரியாத கொடுங்க... யாரும் முட்டாள் கிடையாது- ஹவுஸ்மேட்ஸின் செயலால் கடுப்பாகி பொளந்துகட்டிய சிம்பு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் :
அந்த மனுவில் இணையதளங்களில் தமக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சிம்பு கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடபட்டுள்ளது. இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
