BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்ட இந்த வாரத்துக்கான புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஹவுஸ்மேட்ஸை சிம்பு திட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடி-க்கென பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. முதல் மூன்று வாரம் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பின்னர் அரசியல் மற்றும் படப்பிடிப்பு பணிகள் இருப்பதன் காரணமாக அவர் பாதியிலேயே விலகினார். அவருக்கு பதில் தொகுத்து வழங்க சிம்புவை களமிறக்கியது பிக்பாஸ் குழு. கமலுக்கு ஈடுகொடுப்பாரா என அனைவரும் யோசித்து வந்த நிலையில், முதல் எபிசோடை சிறப்பாக தொகுத்து வழங்கி, கமலுக்கு பதில் கரெக்டான ஆளு இவர்தான் என சொல்லும் அளவுக்கு பெயர் எடுத்தார் சிம்பு.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பஞ்சாயத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு அதற்கான உடையும் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் ஒரு சிலர் மட்டுமே கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்தனர். சிலர் வேண்டாவெறுப்புடன் செய்தது சிம்புவை எரிச்சலடைய செய்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி ஹவுஸ்மேட்ஸை சிம்பு கடுமையாக திட்டுவது போன்ற புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், என்ன ஆச்சு... எல்லாமே அனுபவம் வாய்ந்தவர்கள். எல்லாமே உங்களுக்கு தெரிகிறது. டாஸ்க டாஸ்க்கா பண்ண வேண்டியதுதானே.. அதுல உங்களுக்கு என்ன தடங்களா இருக்கு. ஆடியன்ஸ் பாக்குறாங்கங்குற ஃபீலே உங்களுக்கு இல்ல. மக்கள் தான் ஓட்டு போட்றாங்க.. நீங்க அந்த மக்களுக்கு மரியாதை கொடுங்க. பாக்குறவங்க முட்டாள் கிடையாது” என சிம்பு பேசியதைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ் வாயடைத்து போகினர்.
இதையும் படியுங்கள்... kavin losliya : பிக்பாஸில் லாஸ்லியாவுடன் மலர்ந்த காதல் என்ன ஆச்சு? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த கவின்

