- Home
- Cinema
- kavin losliya : பிக்பாஸில் லாஸ்லியாவுடன் மலர்ந்த காதல் என்ன ஆச்சு? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த கவின்
kavin losliya : பிக்பாஸில் லாஸ்லியாவுடன் மலர்ந்த காதல் என்ன ஆச்சு? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த கவின்
kavin losliya : கவின் - லாஸ்லியாவுக்கு இடையேயான காதல் தான் பிக்பாஸ் 3-வது சீசனில் ஹாட் டாப்பிக்காக இருந்தது. இவர்களுக்காக கவிலியா என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு லவ் டிராக் ஓடும். அந்த வகையில் முதல் சீசனில் ஆரவ் - ஓவியா, இரண்டாவது சீசனில் மகத் - யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா, நான்காவது சீசனில் சிவானி - பாலா, 5-வது சீசனில் அபிநய் - பாவனி என இது ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
குறிப்பாக இதில் சீரியஸாக காதலித்தது என்றால் அது கவினும் லாஸ்லியாவும் தான். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் தான் அந்த சீசனில் ஹாட் டாப்பிக்காக இருந்தது. இவர்களுக்காக கவிலியா என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இருவரும் இதுகுறித்து பேசாமல் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. முதலாவதாக பிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தற்போது ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதேபோல் கவின் லிப்ட் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஊர்க்குருவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் கவின். இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், காதல் குறித்து சமீபத்தில் கவின் கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது தான் சிங்கிளாக இருப்பதாக ஓப்பனாக சொல்லிவிட்டார் கவின். இதன்மூலம் இவருக்கும், லாஸ்லியாவுக்கும் இடையேயான காதல் முறிவு உறுதியாகி உள்ளது. மேலும் உண்மையான காதலை தற்போது தேடிக்கொண்டிருப்பதாகவும், கண்டிப்பாக ஒருநாள் அப்படி ஒரு விஷயம் அமையும் என்றும் சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் எனவும் நம்புவதாக கவின் தெரிவித்துள்ளார். கவினின் இந்த பேச்சைக் கேட்ட கவிலியா ரசிகர்கள் மனமுடைந்து போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்.... Samantha : அவரே வேண்டாம்னு சொல்லிட்டேன்... அப்புறம் இது எதுக்கு! திருமண புடவையை திருப்பிக் கொடுத்த சமந்தா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.