பாலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்த நடிகர் இர்ஃபான் கான், ஏப்ரல் 29 ஆம் தேதி புற்றுநோய் காரணமாக, மரணமடைந்த நிலையில், அவரை தொடர்ந்து மறுதினமே, பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரும் புற்று நோய் பாதிப்பு காரணமாக இறந்தார்.

இவர்கள் இருவரின் மறைவும், பாலிவுட் திரையுலகினர் மட்டும் இன்றி, அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகமாக்கியது. இந்த இரு திரையுலக ஜாம்பவான்கள் இறுதி அஞ்சலியிலும் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற மன  வேதனையை தெரிவித்துள்ளார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். 

பல்வேறு போராட்டங்களை கடந்து பாலிவுட் திரையுலகில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி, முன்னணி நடிகராக உயர்ந்தவர் இர்ஃபான் கான். குறிப்பாக, பல முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதைகளில் கூட சவாலாக நடித்து ஜெயித்து காட்டியவர், பிரபல நடிகர் இர்ஃபான் கான். 

மேலும் செய்திகள்: காவ்யா மாதவன் - திலீப் தம்பதிக்கு இவ்வளவு கியூட் குழந்தையா? மஞ்சு வாரியரை மிஞ்சும் மகள் மீனாட்சி! போட்டோஸ்
 

பாலிவுட் திரையுலகை கடந்து, ஹாலிவுட் திரைத்துறையினர் தங்களது படங்களில் நடித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் இந்திய நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் இவர் என்றும் கூறலாம். ஜுராசிக் வேர்ல்ட், லைப் ஆப்  பை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் இருக்கு ரசிகர்கள் உண்டு.

 2018ம் ஆண்டு முதலே கேன்சருடன் போராடி வந்த இர்ஃபான் கான் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் சென்ற இர்ஃபான் கான், கொரோனா லாக்டவுன் காரணமாக திடீரென அங்கு சிக்கிக்கொண்டார். அப்போது அவரது அம்மா சயீதா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இர்ஃபான் கான் உடனடியாக இந்தியா திரும்ப முயன்றாலும் லாக்டவுனால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தது. அதனால் நாடு திரும்ப முடியாத இர்ஃபான் கான், தனது அம்மாவின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதற வேண்டிய சோக சம்பவம் அரங்கேறியது. 

இதைத்தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் மரணித்தார்.

மேலும் செய்திகள்: 9 கோடி நிதி உதவியை அள்ளிக்கொடுத்த கொரோனாவில் இருந்து மீண்ட பிரபலம்!
 

இர்ஃபான் இறந்த சோகம் கூட இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில், பாலிவுட் திரையுலகின் மற்றொரு முன்னணி பழம்பெரும் நடிகர், ரிஷி கபூர் உயிரிழந்தார். இவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு, புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நியூ யார்க்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பின் உடல்நலம் தெரியதால், செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். 

இந்நிலையில் 29 ஆம் தேதி இவருடைய உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். இன்றே இவருடைய இறுதி ஊர்வலமும் நடைபெறுகிறது.

நடிகர் ரிஷி கபூரின் இறுதி அஞ்சலியில் கூட சில பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், இர்பான் கான் இறுதி அஞ்சலியில், கோரோனோ ஊரடங்கு  பலரால் கலந்து கொள்ளமுடியவில்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: துப்பாக்கியை கையில் வைத்து அப்பாவுடன் போலீஸ் விளையாட்டு! இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
 

இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கூட இர்ஃபான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவருக்கும் நேரில் அஞ்சலி  கூடசெலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இர்பான் கான் மற்றும்  ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எனினும் இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’  படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.