கொரோனாவால்  பாதிக்கப்பட்டு  அதில் இருந்து மீண்டு வந்த, பிரபல கதாசிரியர் ஒருவர் ஏழை மக்களுக்கு  உதவும் விதமாக ரூபாய் 9 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

ஹாரி பாட்டர் திரைப்படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு, எழுத்தாளராக இருந்தவர், கே.ஜே. ரவுலிங். 54 வயதாகும் இவர், கடந்த ஒரு சில மாதங்களுக்கு  முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் உரிய சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். 

இந்நிலையில், இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல், பசி பட்டினியோடு இருப்பவர்களுக்கு உலகஅளவிலும் , இந்திய அளவிலும் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிதி நிறுவனம்  ஒன்றிற்கு 1.25 மில்லியன் அமெரிக்கன் டாலரை நிதியாக  அளித்துள்ளார்.

இந்திய மதிப்பில் இது சுமார் 9 கோடி ஆகும். இவரின் இந்த  உதவிக்கு சமூக வலைத்தளத்தில் பலர் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

எழுத்தாளர், கே.ஜே.ரவுலிங் உலக அளவில் அதிக சம்பளம் பெரும் பிரபலங்களில் ஒருவர்.  

ஏற்கனவே கொரோனாவினால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில், பல பாலிவுட், கோலிவுட் , டோலிவுட் என அணைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டும் இன்றி, பல்வேறு தொழிலதிபர்களும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.