கடற்கரை முழுக்க ஊழல் கறைப்பட்டோர் கல்லறைகளாய் கிடக்க இம்மண்ணின் வைர மகனுக்கு எம் மண்ணில் சிலை இருக்கக் கூடாதா? என்று சிவாஜியின் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் சேரன் கவிதையால் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சேரன், தனது கோபத்தை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

நாய் நரிக்கெல்லாம் சிலை இருக்கும் இம்மண்ணில் எம் காவிய நாயகனுக்கு சிலை இருக்கக் கூடாதா?

கடற்கரை முழுக்க ஊழல் கறைப்பட்டோர் கல்லறைகளாய் கிடக்க இம்மண்ணின் வைர மகனுக்கு எம் மண்ணில் சிலை இருக்கக் கூடாதா?

சோபன்பாபுக்கு சிலை. வீரம் பேசி கலை வளர்த்த எம் திரைத் திலகத்திற்கு சிலை இருக்கக் கூடாதா?

காறித் துப்பக்கூட வெறுப்பாக இருக்கிறது. உள்ளுக்குள் சினமேறி நெருப்பாக கொதிக்கிறது.

என்றக் கவிதையின் மூலம் சேரன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிபலிப்பாய் இந்த கேள்வியை கேட்டுள்ளார் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.