முதல் பலசரக்கு ஆன்லைன் வர்த்தகமான மண்டி விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்த விளம்பரம் ஒளிபரப்பாகிறது. MUNDIE ஆன்லைன் வர்த்தகமானது உப்பு முதல் பற்பசை வரையிலான பலசரக்குகளை விற்பனை செய்து வருகிறது. அந்த விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளதால் வியாபாரிகள் அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

’’ஆன்லைன் வர்த்தகத்தால் வாழ்விழக்கும் கடைக்காரர்களில் ஒருவராக உங்களை வேண்டுகிறேன். எங்களில் ஒருவராக உங்களை நினைத்து வருகிறோம். உங்கள் அருகில் உள்ள கடைக்காரர்களை வாழ விடுங்கள். இதன் மூலம் பல லட்சம் ஏழை வணிகர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கும். பணத்திற்காக கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்படுவதை தவிருங்கள். நுகர்பொருள் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளாக, நீங்கள் நடித்து தற்போது ஒளிப்பரப்பாகும் மண்டி  ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஒருவிளம்பரத்தில்  நடிப்பதற்கு முன் அதில் உள்ள சாதக பாதங்களை ஆராயமாட்டீர்களா?’’என கேள்வி எழுப்பி வருகிறார்கள் வியாபாரிகள். 

அதனைத் தொடர்ந்து இந்த விளம்பரப்படத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டங்களை விரைவில் தமிழகம் தழுவிய அளவில் நடத்தவும் வியாபாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.