இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம்’’என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனவால் பலியான மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் மறுத்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தினால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சைமன். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றபோது எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, மருத்துவரின் உடல், அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அதிகாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பின், பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

 

இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெறும் மன இறுக்கத்தையும் உண்டு செய்திருக்கும்.

 

மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம். இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.