உலகையே உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் திரைத்துறையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி முதலே அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகிற்கு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: என்னய்யா இது வீட்டில இருக்க சொல்லுறீங்க...கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கமல் கொடுத்த சூப்பர் ஐடியா...!

சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் பிசியாக சுற்றிக்கொண்டிருந்த திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வருகின்றனர். சிலரோ தங்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan) on Mar 18, 2020 at 5:08pm PDT

இதையும் படிங்க: “ராஜா ராணி” ஜோடிக்கு குட்டி இளவரசி வந்தாச்சு... மகிழ்ச்சியில் ஆல்யா - சஞ்சீவ்...!

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது ஓய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது குறித்து வெளியான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?....  தனது ஓய்வு நேரத்தில் ஓவியம் தீட்டி வருகிறார். அப்படி ஓவியம் வரையும் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அழகிய பெண்ணின் முகத்திற்கு வர்ணம் தீட்டும் சல்மான்கானின் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.