கொரோனா வைரஸ், அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வீடியோ மூலமும் வெளியீட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரித்விகா, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு... கொரோனா விழிப்புணர்வோடு,  இதுவரை எந்த ஒரு நடிகர் நடிகைகளும் சொல்லாத விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது.... "எல்லோருக்கும் வணக்கம்... கொரோனா வைரஸ் பற்றி நிறைய வீடியோக்களை பதிவிட்டு பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் நானும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

வெளியில் சென்று வந்தால், அதிகப்படியாக கைகழுவ வேண்டும் என கூறுவதால், பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, வழக்கத்தைவிட அதிகம் கைகழுவ துவங்கியுள்ளனர்.

இதற்கும் ஒரு சிறு  விழிப்புணர்வு தேவைப்படுகிறது.  அதாவது எங்கு வெளியில் சென்று வந்தாலும் 20 நொடிகள் கைகழுவ வேண்டும் என கூறியுள்ளதால்,  தண்ணீரை குழாய்யை திறந்து வைத்துக் கொண்டே, நான் உட்பட பலரும் கை கழுவுகிறோம்.

இதனால் தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் குழாய்யை மூடிவிட்டு, நன்கு தேய்த்த பிறகு கை கழுவ வேண்டும் என்கிற நினைப்பு மறந்து விடுகிறது.

அடுத்து கோடை காலம் துவங்க உள்ளதால், பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை தலை தூக்கும். 20 நொடிகள் கை கழுவும் போது முதலில் கையை தண்ணீரால் நனைத்து கொண்டு, தண்ணீர் குழையை  மூடிவிட்டு, பின் சோப்பு போட்டு நன்றாக கையை தேய்த்து கொண்டு தண்ணீரை திறந்து கையை கழுவ வேண்டும். இதனால் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும்.

காரணம் முன்பை,  இந்த பிரச்சினையின் காரணமாக அதிக தண்ணீர் கை கழுவுவதற்காக நாம் செலவிடுகிறோம். இதனை முக்கியமாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்குமாறும் நடிகை ரித்விகா கூறியுள்ளார்.

அதே போல் நீங்களும் இதனை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்று இதுவரை யாரும் கூறாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.