சென்னையில் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை, அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் மீண்டும் சீரியல் பணிகளுக்கு மட்டும் அரசு தரப்பில் அனுமதி கொடுத்தும்... கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து நடிக்கும் நடிகைகளால் அங்கிருந்து இங்கு வர முடியவில்லை.

இதனால் திடீர் என சில சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் சில சீரியல்களை நிறுத்தவும் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அக்னி நட்சத்திரம் என்கிற தொடரில் அகிலா என்கிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த, மெர்சினா நீனு என்கிற நடிகை அந்த சீரியலை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தன்னால் திருவனந்தபுறத்தில் இருந்து சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது. எனவே அக்னி நட்சத்திரம் சீரியலில் இருந்து விலகுகிறேன். எனக்கு பதிலாக புதிய தொடர்களில் நீங்கள் புதிய அகிலாவை பார்க்க முடியும்.

இது நான் முதல் முறையாக நடித்த நெகடிவ் கதாபாத்திரம், ஆனால் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த சீரியலில் நடித்தது தன்னால் மறக்க முடியாத நினைவுகள். கொரோனா பிரச்சனை முடிந்தபின் புதிய சீரியலில் உங்களை சந்திப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார் மெர்சினா.