இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா  வைரஸ் தொற்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. ஒரே நாளில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் முதல் பலரும் கொரோனா  தாக்கத்திற்கு ஆளாகி வருவதால் மும்பையில் கொரோனா அச்சம் உச்சத்தில் உள்ளது. இருப்பினும் மத்திய, மாநில அரசுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்குவது, ஊரடங்கால் கஷ்டப்படும் கூலித்தொழிலாளர்களுக்கு உணவு என பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். ஷாருக்கான், சோனு சூட் உள்ளிட்டோர் தங்களது அலுவலகம், ஓட்டல் ஆகியவற்றை கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர். 


இப்படி அனைவரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வரும் நிலையில் இளம் நடிகர் ஒருவர் மீண்டும் தனது மருத்துவர் பணிக்கு திரும்பியுள்ளார். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஆஷிஷ் கோகலே என்பவர் கொங்கன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருந்துவராக பணியாற்றி வந்தார். இடையில் நடிப்பின் மீது ஏற்பட்ட தீராத காதலால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அக்‌ஷய்குமார் நடித்த கப்பார் இஸ் பேக் என்ற படத்தில் கூட ஆஷிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் படுபிசியாக நடித்து வரும் ஆஷிஷ், கொரோனா போருக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வருவதை கண்டார். தற்போதைய சூழ்நிலையில் நடிப்பு முக்கியமல்ல, நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று யோசித்த ஆஷிஷ் அதிரடி முடிவெடுத்தார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவிலான மருத்துவர்கள் தேவைப்படுவதால், நடிப்பை நிறுத்திவிட்டு ஏற்கனவே அவர் பணியாற்றி மருத்துவமனையில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஷ், தற்போது மருத்துவராக கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றுவதே முக்கியம், கொரோனா வைரஸ்  தாக்கம் குறையும் வரை மருத்துவராக சேவையை தொடர்வேன் என்று உறுதியளித்துள்ளார்.