கொரோனா வைரசுக்கு பயந்து,  முன்னணி நடிகர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் 21 நாட்கள் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியில் போகாமல் வீட்டின் உள்ளேயே இருந்து, எப்படி பொழுதை கழித்து நிறைய யோசித்து வருகின்றனர்.

பலர் தங்களுக்கு தெறித்த யோசனையை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் பல எதிர்பாராத சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தன்னுடைய மனைவி சூசனேவிடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நடிகர் ரித்திக் ரோஷன்,  5 வருடங்களுக்குப் பின் மீண்டும் தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய முன்னாள் மனைவி வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு,  மனைவிக்கு நன்றியையும் கூறியுள்ளார். தன்னுடை இரண்டு குழந்தைகள் தனிமையை  உணரக் கூடாது என்பதற்காக ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவி சூசனேவை, வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கணவரின் வேண்டுகோளை ஏற்று சுசனே தற்போது ரித்திக் ரோஷன் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக வீட்டில் இருக்கும் புகைப்படத்துடன், மனைவி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஹைலைட்டாக பார்க்கப்படும் இந்த சம்பவம் ரீதி ரோஷன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்காலிகமாக இணைத்துள்ள இந்த தம்பதிகள், நிரந்தரமாக சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.