விஜய் டிவியில், ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2 -ல் காமெடியால் கலக்கியவர் புகழ். இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் முகபாவனையை பார்த்தே பலர் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.   

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது, நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், அருண் விஜய், என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'குக் வித் கோமாளி' பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பலர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட... 'காமெடிய ராஜா கலக்கல் ராணி' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகரகமான காமெடி செய்து அசத்தி வந்தார். இந்நிலையில் திடீர் என்று புகழ் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட போது, அவருக்கு அனைவரும் கை தட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து புகழ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில், அனைவருக்கும் வணக்கம்... நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் என நினைக்கிறன். உங்களுடைய ஆதரவால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. விரைவில் பட ஷூட்டிங் முடிந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.