Manimegalai: மணிமேகலை ‘குக் வித் கோமாளி’  நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பரவ, மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக, சன் டிவியில் ஒளிபரப்பான சன் மியூசிக்கில் துவங்கினார். அவர் தொகுத்து வழங்கிய ஃபிரியா விடு, வெட்டி பேச்சு போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மணிமேகலை-ஹூசைன் திருமணம்

மணிமேகலைக்கும், டான்ஸ் மார்ஸ்டர் ஹூசைன் என்பவருக்குக்கும் இடையே காதல் மலர்ந்தனர். இதையடுத்து, மணிமேகலை தனது நீண்ட நாள் காதலனான ஹூசைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

'குக் வித் கோமாளி':

இதையடுத்து, விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை. பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பரவ மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். 

கடந்த இரண்டு சீசனை தொடர்ந்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனிலும் இவர் அடிக்கும் காமெடி அல்டிமேட், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். தனது வேடிக்கையான காமெடி கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் .

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ், பாலாவை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மணிமேகலை. சிவனேனு இருக்கும் குக்குகளை கூட, தன்னுடைய வாயாலேயே பல பிரச்சனையில் சிக்க வைத்து, பல சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார். 

விலையுயர்ந்த பொருள் திருட்டு:

அத்துடன், இவர் தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இதன் மூலமும் இவர்கள் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருதாக சொல்லப்படுகிறது.

மணிமேகலை சமீப காலமாக, வீடு கட்ட இடம், பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகிறார். இதற்கு பல்வேறு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். 

போலீசார் விசாரணை..!

View post on Instagram

இந்நிலையில், மணிமேகலை தங்களுக்கு சொந்தமான பைக்கை நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அதை மரம் நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறாரார்கள்

மேலும் படிக்க....Shruti Haasan : சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு... ‘நீயே அளந்துக்கோ’னு போட்டோ அனுப்பி ஷாக் கொடுத்த சுருதிஹாசன்