Asianet News TamilAsianet News Tamil

குக் வித் கோமாளி அம்மு அமிராமி நடிக்கும் புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லரான “பெண்டுலம்”!

SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 
 

cook with comali ammu ambirami new fantasy thriller pendulum
Author
First Published Sep 1, 2022, 10:20 PM IST

தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.  

மேலும் செய்திகள்: ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
 

cook with comali ammu ambirami new fantasy thriller pendulum

20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்திட்ட B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் தோற்றத்தில் மிரள வைத்த சரத்குமார் - பார்த்திபன்
 

cook with comali ammu ambirami new fantasy thriller pendulum

சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios