குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 3-வது சீசன் தொடங்க உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா, உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார்.

இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 3-வது சீசன் தொடங்க உள்ளது.

இதற்கான புரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக் கிழமையுடன் முடிய உள்ளது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தனர். தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் இதன் ஒளிபரப்பு தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.