தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் அவரது  கணவர் நாக சைதன்யாவிற்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது .  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சமந்தா .  இதனால் நாகார்ஜுனாவின் வீட்டு மருமகளாக மாறிய சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் .  சமீபத்தில்  அக்கினோனி தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது . 

நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான  இதில் அவரது மருமகளான நடிகை சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .  திருமணமான ஆரம்ப காலத்தில் சமந்தா இல்லாமல் அவரது வீட்டு விசேஷங்கள் எதுவுமே நடந்ததில்லை , ஆனால் இந்நிலையில் மிக முக்கியமான விழாவான இதில் சமந்தா கலந்து கொள்ளாதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது .  இதில் பல்வேறு திரை பிரபலங்களும் பங்கேற்றனர் ,  ஆனால் " தீ பேமிலி மேன்" படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது  இதைத்தொடர்ந்து நாகர்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதிலும் நடிகை சமந்தாவை காணவில்லை , இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .  

செல்வாக்கான குடும்பத்தின்  மருமகளான சமந்தா தமது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்ப்பது ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது . குறிப்பாக கணவர் நாக சைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது ஏன் என்றும்   திட்டமிட்ட குடும்ப விழாக்களை  சமந்தா புறக்கணிக்கிறாரோ  என்ற சந்தேகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது .