கேரள மாநில காங்கிரஸ் தலைவர் விடி சதீஷன், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்கள் மலையாள திரையுலகில் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சர்ச்சைக்குரிய கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது ‘தி கேரளா ஸ்டோரி’. சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 3-ந் தேதி ரிலீசானது. அந்த டீசர் தான் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த சர்ச்சையை அடுத்து தி கேரளா ஸ்டோரி படக்குழு மீது வழக்கு பதிவு செய்யுமாறு திருவனந்தபுரம் கமிஷனருக்கு கேரள மாநில டிஜிபி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்... அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி... பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி உதை..!

கேரளாவை பயங்கரவாதிகளின் இருப்பிடம் போல் சித்தரித்துள்ளதன் காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மறுபுறம் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் விடி சதீஷன், இப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் அப்படத்தில் கூறப்படும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்பதால் தடைவிதிக்ககோரி காங்கிரஸ் தரப்பில் குரல் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் விடி சதீஷன் பேசுகையில், “நானும் டீசரை பார்த்தேன். அதில் சொல்லப்படும் தகவல் எதுவும் உண்மையில்லை. கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. மற்ற மாநிலங்கள் முன் கேரளாவின் மதிப்பை குறைக்கும் செயல் இது. கேரளா மீது வெறுப்புணர்வை பரப்பும் படம் இது என்பதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும். இது மதரீதியான பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். கேரளா மாநில போலீசிடமும் இதுகுறித்த ஆதாரங்கள் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... ரூ.65 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை ஜான்வி கபூர்... அந்த வீட்டில் இத்தனை வசதிகளா...!