*    தமிழ் சினிமாவின்  தரத்தை மாற்றியமைத்த இயக்குநர்களின் முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தான் இயக்கும் ஹீரோவுக்காக சமரசம் செய்து கொள்ளாமல் தன் கதையை மட்டுமே நம்பி படமெடுப்பார். கத்தி, துப்பாகி இரண்டு படங்களிலும் முருகதாஸுக்காக இறங்கி நடித்திருப்பார் விஜய். ஆனால் சர்காரில் அது கொஞ்சம் மாறியது. விஜய்க்காக முருகதாஸ் சமரசம் செய்தது போலிருந்தது. அதன் பின் ரஜினியுடன் அவர் இணைந்திருக்கும் தர்பார் படத்தில் முற்றிலுமாகவே முருகதாஸ் தன் கெத்தை இழந்துவிட்டு, ரஜினி புகழ் பாடும் சாதா இயக்குநராக மாறிவிட்டார்! என்று விமர்சனம் எழுந்துள்ளது. 
(ஹும் வெறும் டீசர் வெளியானதுக்கே இப்படியொரு விமர்சனமா?)


*    சிவகார்த்திகேயனின் கிராப் உச்சம் சென்று கொண்டிருந்த நிலையில், சில படங்களில் தோல்வியால் கீழே சரிந்தார். இதன் பின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஓரளவு வெற்றியின் மூலம் ஏதோ சமாளித்தார். இந்த நிலையில் இந்த வாரம் சிவகார்த்தியின் ‘ஹீரோ’ படம் ரிலீஸாகிறது. இது பெரிதாய் ஹிட்டாக வேண்டும்! அப்படி நடந்தால்தான் மீண்டும் மாஸ் ஹீரோ பட்டியலில் சிவாவுக்கு இடம்.
(இனிமே எல்லாம் அப்டித்தான்! ஹ்ஹாங்)

*    பர்வேஸ் முஷரப்புக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய சினிமாவை போட்டு ஆட்டும் ‘பயோபிக்’ மேனியா, அப்படியே முஷரப் பக்கம் திரும்பியுள்ளது. இந்தி இயக்குநர்கள் சிலரும், தமிழ் இயக்குநர்கள் சிலரும் பர்வேஸ் முஷரப்பின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க மெனெக்கெடுகிறார்கள். 
(இதுக்கு பேர்தான் வேலியில போற....)

*    ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருந்த ‘ஹீரோ’ படம் டிராப் ஆகிவிட்டது! எனும் தகவல் கிளம்பியிருக்கிறது. இது உண்மையோ அல்லது பொய்யோ! ஆனால் சொந்த மண்ணான  டோலிவுட் மீது லேசான அப்செட்டில் இருக்கும் தேவரகொண்டாவை தமிழில் செம்ம லவ்லி கான்செப்ட் படம் ஒன்றில் புக் செய்ய இருக்கிறார் இயக்குநர் ஒருவர். இதில் சிறப்பு தோற்றத்தில் மலையாள ஹீரோ நிவின் பாலியும் இருக்கிறார். 
(அப்ப படம் முழுக்க இக்கட, இவிடெ, அக்கட, அவிடெ...ன்னு இருக்குமுன்னு சொல்லுங்கோ)

*    ரஜினிகாந்தின் மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன்! அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பியின் மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரு மருமகன்களும் இணைந்து 3 படத்தில் துவங்கி சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ இருவரும் பிரிந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை தனது போயஸ் இல்லத்தில் விமரிசையாக கொண்டாடினார். அப்போது அதில் கலந்து கொண்ட தனுஷ், அனிருத் இருவரும் மனம் விட்டுப் பேசினர். விளைவு விரைவில் மீண்டும் இணைகிறது இந்த கூட்டணி 
(அப்ப, வொய் திஸ் கொலவெறி சீசன் 2 வரபோகுதுன்னு சொல்லுங்க)