Asianet News TamilAsianet News Tamil

‘அந்தப் படத்தை திரையிடக்கூடாது’... ஜெயம் ரவியின் அப்பாவை எச்சரித்த சென்னை கமிஷனர் அலுவலகம்...

இந்நிலையில் போலீஸுக்கு யார் போட்டுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. கமிஷனர் அலுவலகம் இப்பபடத்தை  திரையிட தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு அவசர கடிதத்தை தியேட்டர் நிர்வாகத்துக்கு கமிஷனர் அலுவலகம் இன்று அனுப்பியிருக்கிறது.

commissionar office sends warning letter to editor mohan
Author
Chennai, First Published Dec 7, 2018, 4:32 PM IST

வரும் ஞாயிறு மாலை 6 மணி அளவில் எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுவதாக இருந்த ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற படத்தைத் திரையிடக்கூடாது என்று சென்னை கமிஷனர் அலுவலகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறது.commissionar office sends warning letter to editor mohan

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகனுக்கு சொந்தமான எம்.எம்.பிரிவியூ தியேட்டர். இத்தியேட்டரில் கடந்த ஏழெட்டு வாரங்களாக சுயாதீன சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மதுபானக் கடை’, ’ஒளி திவசத்தே களி’[மலையாளம்] போன்ற தரமான படங்களைத் திரையிட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் வரும் ஞாயிறன்று சென்சாரால் சர்டிபிகேட் மறுக்கப்பட்ட ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற படத்தை இலவசமாகத்திரையிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களிடம் தலைக்கு ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, அர்விந்த் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான அப்பட்டமான உண்மைகளைப் போட்டு உடைத்திருப்பதாக செய்திகள் உண்டு.commissionar office sends warning letter to editor mohan

இந்நிலையில் போலீஸுக்கு யார் போட்டுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. கமிஷனர் அலுவலகம் இப்பபடத்தை  திரையிட தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு அவசர கடிதத்தை தியேட்டர் நிர்வாகத்துக்கு கமிஷனர் அலுவலகம் இன்று அனுப்பியிருக்கிறது.commissionar office sends warning letter to editor mohan

இத்திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ’தமிழ் ஸ்டுடியோ’ அருண் ‘ஆளும் இந்த அரசு மிக கொடூரமானது. ஞாயிறு தமிழ் ஸ்டுடியோ திரையிட இருக்கும் நண்பர் அரவிந்தனின் ’தெளிவுப்பாதையின் நீச  தூரம்’ திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கமிசனர் அலுவலகம் M M திரையரங்கிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. இதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து வழக்குறைஞர்களுடன் விவாதிக்கொண்டிருக்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios