Asianet News TamilAsianet News Tamil

Hari : ஓரு படத்துக்கு ப்ரோமோஷன் எவ்வளவு முக்கியம்? தேர்தலை மேற்கோள்காட்டி அழகாக விளக்கிய இயக்குனர் ஹரி!

Director Hari : கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் ஹிட்டான, நடிகர் பிரசாந்தின் "தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஹரி.

Commercial movie king veteran director hari explains the importance of promotion for movies ans
Author
First Published Apr 4, 2024, 2:42 PM IST

தூத்துக்குடியில் பிறந்த இயக்குனர் ஹரி, தனது பட்டப் படிப்பை முடித்த பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுடைய "கல்கி" திரைப்படத்திலும், இயக்குனர் சரணின் "அமர்க்களம்", "பார்த்தேன் ரசித்தேன்", மற்றும் "அல்லி அர்ஜுனா" போன்ற படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். 

அதன் பிறகு சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்தின் "தமிழ்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது. "சாமி",  "கோவில்", "அருள்", "ஐயா", "ஆறு", "தாமிரபரணி", "வேல்", "சிங்கம்", மற்றும் "பூஜை" என்று இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறியது. 

Malvika Sharma : படு கிளாமர் போஸ்.. கிறங்கடிக்கும் மாளவிகா ஷர்மா... லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் பிரபல நடிகர் விஷால் அவர்களுடைய "ரத்தனம்" திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இதற்காக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ளார். "தொடக்க காலங்களில் மாட்டு வண்டிகளில் சினிமா படத்தினுடைய போஸ்டர்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வந்தனர்". 

"அதன்பிறகு அதுவே டிஜிட்டல் முறையில் இன்று பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறது, தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகிறார்கள், யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இருப்பினும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மக்களை சந்தித்து தங்களுக்கான வாக்கை கேட்பது போலத்தான் இந்த ப்ரோமோஷன் பணிகளும்". 

"இயக்குனர் மணிரத்தினம் ஒவ்வொரு படத்தையும் வெளியிடும் பொழுது, தனது ஒட்டுமொத்த பட குழுவையும் அழித்துக் கொண்டு நகரங்கள், நகரங்களாக சென்று பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நிச்சயம் எல்லா இயக்குனர்களும் அதை செய்ய வேண்டும். வெறும் போஸ்டர்கள், செய்திகள் மட்டும் வெளியானால் அதை மக்கள் பெரிய அளவில் உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள்". 

"மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் தான் ஒரு திரைப்படம் வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெறும். அதே போல ஒரு படத்திற்கு இன்று எவ்வளவு மெனக்கடல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்". 

"ஆகவே பிரமோஷன் என்பது ஒரு படத்தின் மிக மிக முக்கியமான ஒன்று, படத்தை எடுப்பதற்கு முன்பு எவ்வளவு சிரமப்படுகிறோமோ, அதே போல படத்தை எடுத்த பிறகும் அதை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு முன்பு பல சிரமங்களை மேற்கொண்டு ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Simran: சிம்ரனை காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள் இத்தனை பேரா? இடுப்பழகியின் சீக்ரெட் லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios