அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு கொண்டு வந்த விஜய் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல உதவிய தயாரிப்பாளருக்கு பிற்காலத்தில் வாடகை வீடு கூட கொடுக்காமல் தவிக்கவிட்டவர் தான் நம் தளபதி என்கிற ரகசியம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் புரட்சிகரமான படங்களை எடுத்து புகழ்பெற்றவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மகன் தான் தற்போதைய தமிழ் திரையுலகின் தளபதி விஜய். தந்தை இயக்குனர் என்கிற நிலையில் மகன் விஜய்க்கு சினிமா மீது தீராத காதல். படிப்பில் கவனம் செலுத்தாத விஜய் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றதால் தான் இயக்குனராக சம்பாதித்த ஒட்டு மொத்த பணத்தையும் போட்டு விஜயை ஹீரோவாக வைத்து படங்களை எடுத்து வந்தார் எஸ்.ஏசி.

நாளைய தீர்ப்பு, செந்தூரபாண்டி என அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியில்லாமல் மகனை வைத்து கிட்டத்தட்ட பி கிரேட் ஆபாச படமாக எஸ்ஏசி எடுத்தது தான் ரசிகன் திரைப்படம். இந்த படத்தில் தான் நாயகன் விஜய் தனது மாமியாராக நடித்த ஸ்ரீவித்தியாவிற்கு முதுகில் சோப்பு போட்டுவிடும் கிளுகிளுப்பு காட்சி இடம்பெற்று இருக்கும். இப்படி எல்லாம் படம் எடுத்து கூட மகன் தேறவே இல்லை. இந்த நிலையில் தான் அப்போது ஓரளவு சிறந்த கதை ஆசிரியராகவும், பிரபல தயாரிப்பாளர்களின் நண்பராகவும் இருந்த கலைஞானத்தை தேடிச் சென்று சந்தித்துள்ளார் எஸ்ஏசி.

தனக்கு பெரிய அளவில் எஸ்ஏசி பழக்கம் இல்லாத நிலையில் அவர் வீடு தேடி வந்தது குறித்து ஆர்வத்துடன் விசாரித்துள்ளார் கலைஞானம். அப்போது விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று மனைவி ஷோபா நெருக்கடி கொடுப்பதாகவும், அப்படி எடுத்த படங்களால் தனது 2 வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாகவும் இப்போது ஒரு படம் எடுத்து வருவதாகவும் ஆனால் அந்த படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்று தெரியவில்லை என்று கூறி புலம்பியுள்ளார் விஜயின் அப்பா எஸ்ஏசி.

இது குறித்து தனது நண்பரான பாஸ்கர் எனும் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார் கலைஞானம். மேலும் விஜய் நடித்த காட்சிகள் சிலவற்றையும் பாஸ்கர் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார். தானும் ஒரு படம் எடுக்க தயாராக உள்ளதாகவும், அதற்கு புதுமுகம் போன்ற ஒரு நடிகர் தேவை என்றும் பாஸ்கர் கூறியுள்ளார். இந்த தகவலை எஸ்ஏசியிடம் கலைஞானம் கூற உடனே ஓகே சொல்லியிருக்கிறார் அவர். இதனை தொடர்ந்து பாஸ்கர் தயாரிப்பால் விஜயை ஹீரோவாக நடிக்க வைக்க எஸ்ஏசியே படத்தை இயக்குவதாக ஏற்பாடு ஆகியுள்ளது.

இது குறித்து எஸ்ஏசி, பாஸ்கர், கலைஞானம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கதை என்ன இருக்கிறது என்கிற விவாதம் போயுள்ளது. அப்போது கலைஞானம் கூறிய கதை தான் விஷ்ணு படமானது. கதை பிடித்துப்போக உடனடியாக விஜயை வைத்து சூட்டிங் நடத்தி படத்தையும் வெளியிட்டுள்ளனர். படம் எதிர்பார்க்காத அளவிற்கு நன்றாக ஓட விஜயின் மார்க்கெட் ஒரு கட்டத்திற்கு முன்னேறியது. அதுநாள் வரை விஜயை வைத்து படம் எடுக்க முடியாது என்று ஓடிய தயாரிப்பாளர்கள் அவர் வீட்டு முன் வரிசை கட்டினர்.

ஆனால் இதில் கொடுமை என்ன என்றால் விஷ்ணு படத்திற்கு கதையை கூறியவர் கலைஞானம். ஆனால் படத்தில் கதை என்றுஅவரது பெயருக்கு பதில் தனது மனைவி ஷோபா பெயரை போட்டுக் கொண்டார் எஸ்ஏசி. ஆனால் இதனை பெருந்தன்மையாக மன்னித்த கலைஞானம் கதை சொல்லியதற்கு தனக்கு ஏதாவது பேமென்ட் தருவார்கள் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால் கடைசி வரை அந்த பேமென்ட் வரவே இல்லையாம். இது குறித்து பேச எஸ்ஏசியை சந்திக்க சென்ற போதெல்லாம் ஒரு வணக்கம் மட்டும் வைத்து அனுப்பிவிடுவாராம் எஸ்ஏசி.

அதுமட்டும் இல்லாமல் திரையுலகில் ஏறுமுகத்திற்கு சென்ற பிறகு விஜய் தனது சம்பள பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து சென்னையில் எண்ணற்ற வீடுகளை கட்டி வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த கலைஞானம், எஸ்ஏசியை சந்தித்து தனக்கு ஒரு வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளார். மகனுக்கு விஷ்ணு என்கிற படம் அமைய காரணமானதுடன் அதற்கு கதையும் கூறி அவரது வாழ்வு உயர காரணமானவர் என்பதால் சொந்த வீடே கட்டிக்கொடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஆனால் கலைஞானத்திற்கு எஸ்ஏசி அளித்தத பதில் என்ன தெரியுமா?, அண்ணா, இப்போது வீட்டில் நிதி விவகாரங்கள் எல்லாம் என் மகனும், மருமகளும் தான் வாடகைக்கு வேண்டும் என்றால் அவர்களிடம் தான் பேச வேண்டும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றாராம் எஸ்ஏசி. பாருங்கள் நன்றிக்கடனை எப்படி எஸ்ஏசி திருப்பி செலுத்தியுள்ளார் என்று. இந்த தகவலை அப்படியே கலைஞானம் கூறியுள்ள வீடியோ இணைப்பு இதோ.