பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும், அவருடைய தாய் மாமா மகன் மோசஸ் என்பவருக்கும் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக காதலியாக நடித்த மதுமிதாவை, 'அட அட தேன் அட' என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வலிக்க சிரித்தனர் ரசிகர். இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மாறிவிட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் கூட நடித்திருந்தார். 

இந்நிலையில் இன்று சென்னை, கோயம்பேட்டில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் மதுமிதாவிற்கும் அவருடைய தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல், என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில்  பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் மதுமிதாவின் தந்தை, வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். எனவே  இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.